பிரதான செய்திகள்

நாட்டில் மீண்டும் இனவாத மோதல்களை ஏற்படுத்த முயற்சி – அனுரகுமார திஸாநாயக்க

நாட்டுக்குள் மீண்டும் இனவாத மோதல்கள் ஏற்பட இடம்கொடுக்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் நாட்டுக்குள் மீண்டும் இனவாத மோதல்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற சோசலிச இளைஞர் சங்கத்தின் மூன்றாவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை மீண்டும் ஒரு முறை பின்நோக்கி கொண்டு செல்ல இடமளிக்கப் போவதில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் போலீசார் .

Maash

வெப்ப வெட்டுவான் பிரதேசம் கொம்பர் சேனை பண்டாரக் கட்டு பகுதி விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்றிந்தார் ஷிப்லி

wpengine

முறிமோசடி ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

wpengine