பிரதான செய்திகள்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் 04 மாகாணங்கள் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 27 ஆயிரத்து 885 குடும்பங்களைச் சேர்ந்த 89 ஆயிரத்து 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் 21 ஆயிரத்து 714 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 113 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஊடகவியலாளா்களுக்கு மோட்டாா் பைசிக்கல் யாழ் வழங்கி வைப்பு

wpengine

தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழப்பு!

Editor

மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் விழா (படம்)

wpengine