பிரதான செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

வடக்கோடு, கிழக்கிற்கு நடந்த திருமணம்.

wpengine

ISIS தாக்குதல்! மன்னார் முள்ளிக்குளம் கடற்படையில் பயிற்சி

wpengine

சம்பந்தனுக்கு எதிராக கொழும்பில் சத்தியாக்கிரகம்! சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine