எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வத்தலையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடும் தாஹிர் ரிசான் என்பவர் தேர்தல் சட்டத்தை மீறி, சட்ட விரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் மபோலை வத்தளை பிரதேசத்தில் மக்களும், அரசியல் தலைவர்களும், ஏனைய கட்சி வேட்பாளர்களும் கடும் விசனம் தெரிவித்து உள்ளனர்.
தேர்தல் காலமான இந்த நேரத்தில் கடந்த 13.02.2018ஆம் திகதி, மாலை 4 மணியளவில் வத்தளை பிரதேச சபை வளாகத்தினுள் சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். மேலும், அதை தைரியமாக தனது FACEBOOK பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
இந்த சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தை வத்தளை பிரதேச சபையில் பணிபுரியும் இரு ஊழியர்கள் ஏற்பாடு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் சட்டத்தையும், நாட்டு சட்டத்தையும் மதிக்காமல் அதை உடைத்து தான்தோன்றி தனமாக செயற்படும் இப்படிப்பட்ட வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். என ஊர் மக்கள் கருத்து தெரிவிக்கன்றனர்.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவர்களே, ஜனாதிபதி அவர்களே பிரதமர் அவர்களே! தேர்தல் சட்டம் என்பது ஏனைய கட்சி வேட்பாளர்களுக்கு மாத்திரமா? ஐக்கிய தேசிய கட்சியினருக்கு இல்லையா?