2020 பொதுத் தேர்தலை 10பில்லியன் ரூபா செலவுக்குள் நடத்தி முடிக்க முயற்சிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டதை காட்டிலும் அதிக தொகை செலவு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தேர்தலை நடத்தி முடிக்க 7- 7.5 பில்லியன் ரூபாவே தேவை என மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும் கொரோன தடுப்பு சுகாதார வசதிகளை செய்துக் கொடுக்க வேண்டியுள்ளமையால் செலவு மேலிட்டுள்ளது.
இந்தநிலையில் முடியுமானளவு 10 பில்லியன் ரூபாவுக்குள் நடத்தி முடிக்க முயற்சிப்பதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில், 90 நிரந்தர பணியாளர்களும், 60 தற்காலிக பணியாளர்களும் சேவை புரிகின்றனர்.
அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சுகாதார நடைமுறைகளுக்கு செலவுகள் செய்யப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.