பிரதான செய்திகள்

தேசிய மீலாத் விழா மன்னாரில் இருந்து கொழும்புக்கு மாற்றம்! பிரதம அதிதி மஹிந்த

முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய மீலாத் விழா கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெறவுள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வை இம்முறை மன்னாரில் நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேற்று முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கு திணைக்கள அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது தேசிய மீலாத் நிகழ்வினை ஏற்கனவே திட்டமிட்ட தினத்தில் கொழும்பில் நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

Related posts

பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காணவிரும்ப வில்லை -கோத்தா

wpengine

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட மாநாடு

wpengine

மு.காவின் உயர் பீட ஊஞ்சல் விளையாட்டு

wpengine