பிரதான செய்திகள்

தெஹிவளையில் முன்னால் அமைச்சர் றிஷாட் கைது

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியூதீன், கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிசாத் பதியூதீன் தெஹிவளையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிசாத்தை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.


எனினும், கைது செய்வதற்காக சில பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்ட போதும் ரிசாத் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கை காரணமாக அவர் தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

குருநாகல் பகுதியில் அமைதியற்ற சூழ்நிலை ! ரணில் போன்னயா? (வீடியோ)

wpengine

மக்கள் விடுதலை முன்னணியின் மீட்புப் படையணியான செந்தாரகைப் படையணி மீண்டும்

wpengine

தோப்பூரில் பள்ளியினுள் ஒருவர் வெட்டிக் கொலை!

wpengine