துறையூர் மிஸ்பாக்
அ.இ.ம.கா தலைவர் றிஷாத் பதியுதீன் தடுப்பு காவலில் உள்ளதை எனது மனம் சிறிதும் ஏற்கவில்லை.
அதற்கு பல காரணங்கள் உண்டு..
அவரை யாராவது சந்திக்க போனால், முதலாவது சாப்பிட்டீர்களா என கேட்பார். அவர் வெளியேறும் போது, தங்குமிட வசதி பற்றி நன்கு விசாரித்து, பாதுகாப்பாகவே வழி அனுப்பி வைப்பார். இவைகளே அவருடைய பண்புகள். இதனை தூர இடங்களில் இருந்து அவரை சந்திக்க சென்றவர்கள் நிச்சயம் கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். எத்தனையோ பேருக்கு சாப்பிட, தங்க ஏற்பாடுகளை செய்துள்ளதை என் கண்களால் பார்த்துள்ளேன்.
இவ்வாறு பலர் பாதுகாப்பாக தூங்க, சாப்பிட ஏற்பாடு செய்த அ.இ.ம.கா தலைவர், இன்று பாதுகாப்பாக தூங்க, சாப்பிட முடியாத நிலையில் உள்ளார். இதனை மனச்சாட்சி உள்ள எந்த உள்ளமாவது ஏற்குமா?
இறைவன் போதுமானவன்….