பிரதான செய்திகள்

தீ விரவாதம் நாட்டுக்குள் ஊடுறுவதற்கு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் எவ்வகையான நெருக்கடிகள் காணப்பட்டாலும் அனைத்தையும் வெற்றிக்கொண்டு அரசாங்கத்தை நிச்சயம் கைப்பற்றுவோம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் மே தினம் உழைப்பாளிகளுக்கு பல சலுகைகளை பெற்றுக் கொள்ளும் ஒன்றாக காணப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவினர் ஏற்பாடு செய்த மே தினக் கூட்டம் இன்று கோட்டை நகர சபை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொழிலாளர்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பத்தில் இருந்து அக்கறை கொள்ளவில்லை.

இவர்கள் மேற்கத்தைய தொழிற்கலாச்சாரத்திற்கு அடிபணிந்து செயற்படுவதே பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் தற்போது கொள்கையற்ற அரசாங்கம் ஆதிக்கம் செலுத்துவதால் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அரச தலைவர்களுக்கிடையில் காணப்படுகின்ற போட்டித்தன்மை இன்று சர்வதேச தீவிரவாதம் நாட்டுக்குள் ஊடுறுவதற்கு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

மூன்று உயிர்களை எடுத்த பஸ் விபத்து.

Maash

அரச அலுவலகங்களில் அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும்

wpengine

ஷரிஆ சட்டத்திற்கு,பெண்கள் அணியும் புர்க்காவுக்கு நான் எதிர்ப்பு

wpengine