பிரதான செய்திகள்

திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

(ஊடகப்பிரிவு)
திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

திருமலை மாவட்டத்தில் கட்சியை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகவும், எதிர்காலத்தில் கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் மற்றும் வட்டாரங்களின் அபிவிருத்தி தேவைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளரும், பிரதியமைச்சருமான அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி, செயலாளர் சுபைர்தீன், மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

Related posts

எனது சம்பளத்தைக் கூட பெறாமல் அதனை மக்களுக்காக செலவு செய்கிறேன்- சஜித்

wpengine

2024ம் ஆண்டின் 1ம் தவணை கல்வி நடவடிக்கை பெப்ரவரி 21 இல்!

Editor

இத்தாலியின் பின்பு தற்போது மியான்மாரில் பாரிய பூமியதிர்ச்சி

wpengine