பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

திருமலையில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்!

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் (18) இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இரு சிறுவர்களும் முள்ளிப்பொத்தானை-ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் சக்தி  (13வயது) மற்றும் முள்ளிப்பொத்தானை- 95 யைச் சேர்ந்த அலிப்தீன் அஸ்கார் (13வயது) எனவும் தெரியவருகின்றது.

நோன்பு நோற்றுக் கொண்டு, சிறுவர்கள் சிலர் சேர்ந்து தம்பலகாமம்- முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள பரவிப்பாஞ்சான் என்ற குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அச்சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவர்களின் சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

“க்றீன் கார்ட்” லொட்டரிக்கு ஆப்பு வைத்த டொனால்ட் ட்ரம்ப்

wpengine

ஐல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மன்னாரில் பேரணி.

wpengine

வெளிநாட்டு நிறுவனங்கள்! இலங்கையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க நடவடிக்கை

wpengine