பிரதான செய்திகள்

திருமதி லதா மங்கேஷ்கரின் மறைவையிட்டு மிகவும் வருந்துகின்றேன்-கோத்தா

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்களை வசீகரித்த பிரபல பாடகி திருமதி லதா மங்கேஷ்கரின் மறைவையிட்டு மிகவும் வருந்துகின்றேன்.

இந்தியாவின் பாடகியாக இரசிகர்களின் இதயங்களில் தங்கி இந்திய இசைத் துறையில் குறிப்பிடத்தக்க பெரும் பங்களிப்பைச் செய்த லதா மங்கேஷ்கர், செட சுலங் திரைப்படத்தில் “ஸ்ரீலங்கா .. மா பிரியதர ஜெய பூமி” போன்ற சிங்கள பாடல்களையும் பாடியுள்ளார். அந்த தருணத்தை நான் மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related posts

வவுனியா சாரதியின் அசமந்தபோக்கு! வயோதிபர் காயம்

wpengine

ஜனாதிபதி சட்டத்தரணியாக தழிழர் நியமனம்

wpengine

25 ஆயிரம் தொழில் வாய்ப்பு! மன்னாரில் தொழில் பயிற்சி

wpengine