Breaking
Sun. May 5th, 2024

கர்நாடக மாநிலம் மாண்டியா நகரில், இளைஞர்களுக்கு மத்தியில் ´அல்லா ஹு அக்பர்´ என முழக்கமிட்ட கர்நாடக மாணவியின் வீடியோ வைரலானது சந்தேகத்திற்கு இடமின்றி உண்மையான விஷயம்.

அவரை பொறுத்தவரை, கல்லூரியில் மற்றவர்கள் காவி துண்டோ தலைப்பாகையோ அணிவதில் எந்த சிக்கலும் இல்லை. அந்த ஆடைகள், அவர் அணியும் ஹிஜாப் போலவே என அவர் கருதுகிறார்.

தன்னை நோக்கி ´ஜெய் ஸ்ரீராம்´ என கோஷமிட்ட இளைஞர்கள் கூட்டத்திற்கு மத்தியில் கையை உயர்த்தி முழக்கமிட்ட முஸ்கான் கான், “அவர்கள் என்ன அணிகின்றனர் என்பதில் எனக்கு எந்த பிரச்னை இல்லை,” என்று பிபிசி இந்தியிடம் கூறினார்.

எனக்கு வேண்டியதெல்லாம் என் உரிமைகளுக்கும், கல்விக்கும் நான் துணை நிற்க வேண்டும் என்பதே,” என்று மாண்டியா நகரின் புறப்பகுதியில் எளிமையான வீட்டில் வசிக்கும் அவர் கூறுகிறார்.

இவரது தந்தை ஒரு வியாபாரி. அவருக்கு மூத்த சகோதரரும், இளைய சகோதரியும் உள்ளனர். சல்வார் கமீஸ் அணிந்து கொண்டு, ஒரு துப்பட்டாவை ஹிஜாப் போல் தலையில் சுற்றியுள்ளார் முஸ்கான். கல்லூரி வளாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் இருப்பதை விட அவர் உயரமாக தோற்றமளிக்கிறார்.

 நான் வகுப்புக்கு செல்லவே கல்லூரியை அடைந்தேன். அங்கு பல இளைஞர்கள் காவி துண்டுகளை தோளில் போட்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் என்னை வழிமறித்தனர். நான் கல்லூரி வளாகத்திற்குள் நுழைய முடியாது என்று அவர்கள் குரல் கொடுத்தனர்,” என்கிறார் முஸ்கான்.

நுழைவாயிலை அடையும்போதே, அங்கிருந்த இளைஞர்கள் புர்கா அணிந்து வந்த மூன்று, நான்கு மாணவிகளை திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தனர்.

“அந்த மாணவர்களிடம் மனிதநேயம் இல்லை. அவர்கள் துண்டை சுற்றிக்கொண்டு, ஜெய் ஸ்ரீராம் என்று மட்டுமே கோஷமிட்டனர். நான் புர்காவை கழற்ற வேண்டும் என்று அவர்கள் கூறினர். அப்போது தான், கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவேன் என்று அச்சுறுத்தினர். அப்போதுதான் நான் தீர்மானமாக இருந்தேன். நான் எப்படியோ கல்லூரிக்குள் நுழைந்தேன்,” என்றார் முஸ்கான்.

தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, வகுப்பறைக்குள் நுழைய முயன்றபோது, ” 30, 40 இளைஞர்கள் என்னை நோக்கி ஒடி வந்தனர். அவர்கள் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிட்டனர். நான் என் புர்காவை கழற்ற வேண்டும் என்று என்னை நோக்கி கோஷமிட்டனர். இல்லையெனில், நான் வெளியில் செல்ல வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“ஆம்! நான் ´அல்லா ஹு அக்பர்´ என்று முழக்கமிட்டேன். எனக்கு பயம் ஏற்பட்டபோது, அல்லாவை அழைத்தேன். எனக்கு அது தன்னம்பிக்கையை தந்தது,” என்கிறார் முஸ்கான்.

அதன் பிறகே, கல்லூரி முதல்வரும், பேராசிரியர்களும் விரைந்து வந்து, என்னை பாதுகாப்போடு வகுப்பறைக்குள் அழைத்து சென்றனர்.

இந்த சூழ்நிலையை மேலும் தீவிரப்படுத்தும் இளைஞர்கள் மீது முஸ்காம் இன்னும் கோபமாக இருக்கிறார்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் பலர் வெளியில் இருக்கும் நபர்கள். “உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதை மத பிரச்னை ஆக்க வேண்டாம்,” என்கிறார் முஸ்கான்.

அவர் இந்துக்களையும், முஸ்லிம்களையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்று மிகவும் தெளிவாகக் கூறுகிறார்.

நான் என்னுடைய உரிமைகளுக்காகவும் கல்விக்கும் ஆதரவாக நிற்கிறேன். நான் ஹிஜாப் அணிந்து கொண்டிருப்பதால், இவர்கள் நான் கல்வி கற்க அனுமதி அளிக்க மறுக்கின்றனர்,” என்கிறார் அவர்.

சமூக ஊடகத்திலும், பிற ஊடகங்களிலும் தனக்கு கிடைக்கும் பாராட்டுகளை பற்றியும் பேசும்போது, “என் மீது அவர்கள் மிகுந்த அன்பு செலுத்துகின்றனர். எனக்கு அது பெரும் பலத்தை அளிக்கிறது. அவர்களுக்கு மிகுந்த நன்றிகள்,´ என்று முஸ்கான் தெரிவித்தார்.

நீங்கள் இடது கையை தூக்கி ´அல்லா ஹு அகபர்´ என்று முழக்கமிட்டீர்கள். நீங்கள் இடது கை பழக்கம் உள்ளவரா? என்று அவரிடம் கேட்டோம்.

நேர்காணல் செய்தபோது அப்போதுதான் அவர் முதன் முறையாக புன்னகைத்தார்.

” இல்லை. எனக்கு இடது கை பழக்கமில்லை. அங்கு இருந்த பரபரப்பு காரணமாக, தானாக என் இடது கையை உயர்த்தினேன்,” என்று பதிலளித்தார் முஸ்கான்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *