திருக்கோவில் தமிழ் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர் ஒருவருக்கு வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதுடன் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை அதிபர் டேய் போட்டு பேசியிருப்பதையும் உலமா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கையில் இவ்வாறான இனவாதம் இன்னமும் இருக்கும் போது வடக்கும் கிழக்கும் இணைந்தால் இனவாத ஒடுக்குதல் இதைவிட அதிகமாக இருக்கும் என்பதை மிக இலகுவாக புரியலாம்.
மேற்படி முஸ்லிம் ஆசிரியர் பல வருடமாக மேற்படி பாடசாலையில் கற்பித்து வருவதுடன் முன்னர் இருந்த அதிபர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கும் அனுமதி வழங்கியுள்ளனர். புதிதாக வந்த அதிபரே இனவாதமாக செயற்பட்டதாக உலமா கட்சியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.