பிரதான செய்திகள்

திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகளே! இது உங்களின் கவனத்திற்கு

(ஏ.எஸ்.எம்.தானீஸ்)

மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் குடிநீர் இணைப்பினைப் பெறுவதற்காக வீதிகள் குறுக்காக தோண்டப்படுவதால் தார் வீதிகளும்,கொங்றீட் வீதிகளும் சேதமாகி சீராகப் பயணிக்க முடியாமல் பல அசௌகரியங்களை அடைவதாக பிரதேச பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை இதனால் பல விபத்துக்கள் நாளாந்தம் இடம் பெறுவதாகவும்  மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் குடிநீர் இணைப்பு பெற மூதூர் பிரதேச சபைக்கு வீதியில் அகழி வெட்டி அகழியினை மூடுவதற்கான பணமும் செழுத்தப்பட்டும் அகழியினை சம்பந்தப்பட்ட பயனாளிகளே மூடியும் வருகின்ற நிலைமையும் இருப்பதாக பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ் வீதிகள் அனைத்தும் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளாக இருப்பதனால் பிரதேச சபை -வீதிகளின் அடிப்படையில் கொங்றீட்டைக்கொண்டோ அல்லது தாரைக்கொண்டோ அல்லது மண்ணைக் கொண்டோ செப்பனிடாமல் இருப்பது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆகவே மூதூர் பிரதேச சபை இவ்விடயத்தில் கரிசனை கொண்டு விபத்துக்கள் நடைபெறாவண்ணம் வீதிகளை புனர்த்தானம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

33 வருட நிறைவையொட்டி நாசா வெளியிட்ட புதிய புகைப்படம் வெளியானது!

Editor

அரச ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

wpengine

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் குத்தாட்டம்: கேவலமான செயல்

wpengine