கட்டுரைகள்பிரதான செய்திகள்

தாருஸ்ஸலாமிலிருந்து வெல்லம்பிட்டிக்கு செல்வதற்கு ஹக்கீமுக்கு நான்கு நாட்கள் எடுத்துள்ளது?

(கொலன்னாவை – புஹாரி)

இயற்கையின் சீற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட சமுகமாக முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றது.

கொழும்பில் வெல்லம்பிட்டி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அதிக சொத்து இழப்பை சந்தித்தவர்களாக முஸ்லிம்களே! காணப்படுகின்றனர்.

சுனாமிக்கு பின்னர் பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற அராஜகத்திற்கு அடுத்து அதிக சொத்திழப்பை கண்ட முஸ்லிம் பிரதேசமாக வெல்லம்பிட்டியே திகழ்கின்றது.

வெல்லம்பிட்டி ஆண்டாண்டு காலமாக இந்த வெள்ளப்பெருக்கிற்கு முகம்கொடுத்து வந்த போதிலும் இதுவரை அந்த வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கான மாற்று வழிமுறை குறித்து அரசாங்கங்களோ அல்லது அந்த மக்களின் வாக்குகளை பெறும் முஸ்லிம் பிரதிநிதிகளோ சிந்திக்கவே இல்லை என்பதற்கு தற்போதைய வெள்ளப்பெருக்கு மீண்டும் சாட்சி கூறுகின்றது.

பள்ளிகளை பாதுகாப்பது, ஏழைக்குமர்களுக்கு திருமணத்தை செய்து வைப்பது, வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வியூட்டுவது, முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளை தீர்ப்பது இவைகள் மட்டுமல்ல உரிமைகள்.

இவ்வாறான முஸ்லிம் பிரதேசங்களில் ஏற்படும் அனர்த்த பாதிப்புக்களிலிருந்து முஸ்லிம்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை செவ்வன செய்வதும் உரிமைதான்.

இந்த நிலையில் வெல்லம்பிட்டி முஸ்லிம்களை பொறுத்தவரை முஸ்லிம் அரசியல் தலைமைகளால் கைவிடப்பட்டு விட்டார்கள் என்றே கூறமுடிகின்றது.

முஸ்லிம் தலைமைகள் என்று கூறிக் கொள்வோரில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா வழமை போன்று வெல்லம்பிட்டி வெள்ளப்பெருக்கிலும் மௌனம் சாதித்துவிட்டார்.

அதிகாரம் தன்னிடம் இல்லையென்று கூறி அவர் ஒதுங்கிக் கொள்ள முடியாது. அரசியலில் மீண்டும் ஒரு தரம் சுற்றுப்பணம் மேற்கொள்ள விரும்பும் பேரியல் கூட தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அந்த மக்களுக்கு எந்தவித உதவிகளையும் செய்யவில்லை.

மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர்களாக இருக்கும் ஹிஸ்புல்லாஹ் வெள்ள நிவாரண உதவிகளை செய்துள்ள போதிலும் கூட தனது அமைச்சு செல்வாக்குகளை கொண்டு  மேலும் செய்திருக்கலாம்

. நல்லிணக்க அரசில் பலம் பொருந்திய அமைச்சராக உள்ள கபீர் ஹாசிம், பௌசி, ஹலீம் போன்றோருக்கு வெல்லம்பிட்டி என்ற ஒரு பிரதேசம் இருப்பது தெரியாதளவுக்கு மிகவும் அசமந்தப்போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

வெல்லம்பிட்டி பக்கம் அவர்கள் எட்டிப்பார்ப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை.முஸ்லிம்களின் உரிமை காக்க புறப்பட்ட கட்சியாக வர்ணிக்கப்படும் முகாவும் இந்த விடயத்தில் மிகவும் மோசமாகவே நடந்துள்ளது.

அதிகாரமிக்க அசைமச்சுப்; பதவி , இரண்டு பிரதியமைச்சுக்கள், முஸ்லிம் நாடுகளுடன் அதிக தொடர்பு, முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களுடன் நெருங்கிய நண்பன் என முகா தரப்பினரால் வர்ணிக்கப்படும் அதன் தலைமையான ஹக்கீம் வெல்லம்பிட்டி மக்களால் கூக்குரலிட்டு விரட்டியடிக்கப்படும் அளவுக்கு இவரது சேவை அமைந்தள்ளது.

வெறும் புகைப்படங்களுக்காக ஒருசில நிவாரணப்பொருட்களை வழங்கிவிட்டு தானும் வெல்லம்பிட்டி மக்களின் வெள்ளப்பெருக்கில் பங்குகொண்டேன் என காட்ட அவர் முயன்றதை தொடர்ந்துதான் அந்த மக்களின் கூக்குரலுக்கு இலக்காகியுள்ளார்.

வெல்லம்பிட்டியில் வெள்ளம் பெருக்கெடுத்து அது வற்றிப்போகும் தருவாயில் தான் ஹக்கீம் நான்கு நாட்களுக்குப்பிறகு அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

வெள்ளத்தினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட நாட்களில்  அவர் நாட்டில்தான் இருந்துள்ளார். தாருஸ்ஸலாமிலிருந்து வெல்லம்பிட்டிக்கு போவதற்கு ஹக்கீமக்கு நான்கு நாட்கள் எடுத்துள்ளது.

இததை தான் இன்று முஸ்லிம் சமுகம் கேள்வியாக ஹக்கீமை கேட்டு நிற்கின்றதுசமுகத்திற்கு ஒரு துளியளவேனும் உதவிடாத ஒன்றுக்குமே உதவாத மாநாட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்ய முடிந்த ஹக்கீமுக்கு வெல்லம்பிட்டி மக்களுக்கு உதவி செய்ய பணமில்லை என கூறுவது வெட்கக் கேடாக உள்ளது.

அடுத்தவர்களின் நிவாரணச் சேகரிப்புக்களை அடுத்தவர்களின் காசோலைகளையும் மு.காவின் நிவாரணமாகவும் முகாவின் நிதி சேகரிப்பாகவும் அந்த மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க ஹக்கீம் எடுத்த முயற்சியை அல்லாஹ்வும் பொறுக்கமாட்டான். அதனால் தான் வெல்லம்பிட்டியில் அவதானப்படுத்தப்பட்டுள்ளார்

இலங்கை முஸ்லிம்களிடத்தில் வேரூன்றி வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெல்லம்பிட்டி வெள்ளப்பெருக்கிற்கான பணியினையும் இந்த இடத்தில் அலசிப்பார்க்க வேண்டியுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டவுடன் உடனடியாக அம்மக்களுக்கான நிவாரணப்பணியினை முன்னெடுக்கும் வகையில் அமைச்சர் ரிசாதினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது

மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் தலைமையில் இடம்பெற்றோர் அந்த நிவாரணப்பணியினை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என்ற குற்றசாட்டு  காணப்படுகின்றது.

ரிசாத் எந்த இலக்கை அடிப்படையாகக் கொண்டு அந்தக் குழுவை நியமித்தாரோ அந்த இலக்கு அல்லது நோக்கம் மக்களிடத்தில் பூரணமாக சென்றடையவில்லை என்றே கூறவேண்டும்

இந்த குற்றச்சாட்டுக்களை அறிந்த பின்புதான் தனது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணத்தை ரத்துச் செய்தவிட்டு அவசர அவசரமாக நாடுதிரும்பியுள்ளார்.

21ம் திகதி பிற்பகல் 03 மணியளவில் நாடுதிரும்பிய ரிசாத்  அனைத்து உதவிகளையும் உள்ளடக்கியவராக வெல்லம்பிட்டிக்கு விஜயம் செய்திருந்தார்.

வெல்லம்பிட்டி பிரதேச பள்ளிவாசல் தலைவர்கள் முக்கியஸ்தர்களை சந்தித்து அவர்களை கேட்ட உதவிப்பொருட்களை வழங்கிவைத்தார். அத்துடன் அதற்கான உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

துருக்கியிலிருந்த போது தனது தனிப்பட்;ட நிதியினைக் கொண்டு நான்கு படகுகளை மீட்புப்பணிக்காக சேவையில் ஈடுபடுத்தினார்.

வெல்லப்பெருக்கை சாட்டாக கொண்டு பாதிக்கப்பட்ட வீடுகளில் திருட்டுக்களில் ஈடுபட்டோரை உடன் கைது செய்யவும் மேலும் திருட்டுக்கள் ஏற்படாது தடுக்கவும் பொலிஸ்மா அதிபரடன் பேச்சு நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்

வெல்லம்பிட்டி வெள்ளப்பெருக்கு விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒழுங்குமுறையான செயற்பாட்டை முன்னெடுத்திருந்தால் அரசின் உதவியின்றியே எவ்வளவோ உதவிகளை வெல்லம்பிட்டி பிரதேச முஸ்லிம்களுக்காக செய்திருக்க முடியும் என்பதுதான் இன்று மக்கள் மத்தியில் உள்ள பேசு பொருளாக உள்ளது

வீண்செலவுகளுக்கு பம்மாத்துக்களுக்கும் அதிக பணங்களை வாரிஇறைக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் இனிவரும் காலங்களில் அவ்வாறான வீண் செலவுகளில் ஈடுபடாமல் தடுக்கவும் தட்டிக்கேட்கவும் முஸ்லிம் இளைஞர்கள் முன்வரவேண்டும் என்ற யதார்த்தத்தை வெல்லம்பிட்டி வெள்ளம் அனைவருக்கும் உணர்த்தி நிற்கின்றது.

Related posts

ரணில் “கோ ஹோம்” என்று கோஷம் எழுப்புவதால் எவ்வித பயனும் இல்லை

wpengine

காமம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு: போப் பிரான்ஸிஸ்

wpengine

வலய கல்விப்பணிப்பாளருக்கு எதிராக ஆசிரியர் ஒருவர் உண்ணாவிரதம்.

wpengine