Breaking
Thu. Apr 25th, 2024

(அபூ செய்னப்)

அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் அமீர் அலி இருவரும் செயற்திறன் மிக்கவர்கள் அவர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன் மக்களுக்காக களத்தில் நின்று செயலாற்றும் செயற்திறன் கொண்டவர்கள் இருவரும் என மட்டு,மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் புகழ்ந்து பேசினார் ஞாயிற்றுக்கிழமை பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் இரண்டு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட களுவாஞ்சிக்குடி சித்தி விநாயகர் பாலர் பாடசாலைக் கட்டடத்திறப்பு விழாவில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்

வன்னி மாவட்ட அரச அதிபராக நான் கடமையாற்றிய போது கெளரவ அமைச்சர் ரிசாத் பதியுதீன் அமைச்சராக இருந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் பல்வேறு நலத்திட்டங்களை முன்னின்று செயற்படுத்தினார்,அவர் மக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றக்கூடியவர் அவருடன் பணியாற்றிய காலத்தில் அந்த வன்னிமக்களுக்காக அவர் பாடுபட்டதை நான் நன்கறிவேன்.12805941_1254149877934538_1361971915382286421_n (1)
அவ்வாறே மட்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் பிரதி அமைச்சருமான கெளரவ எம்.எஸ்.எஸ்.அமீர் அவர்களும் இந்த மாவட்டத்தின் மக்களுக்காக இன,மத பேதங்களைக்கடந்து செயலாற்றி வருகிறார், கடந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் அதிகம் அபிவிருத்தி செய்யப்பட்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் அமைந்துள்ளது.அதற்கான முக்கிய காரணம் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களே, பிரதி அமைச்சர் கொண்டுவருகின்ற திட்டங்களை நாங்கள் விரைவில் முடித்துக்கொடுத்தோம். அவரும் ஒன்றன்பின் ஒன்றாக பலநூரு திட்டங்களை கொண்டுவந்து அதனை நிறைவேற்றி இந்த மட்டு மாவட்ட மக்களுக்காக அளப்பெரிய சேவை செய்திருக்கிறார் இன்னும் செய்து கொண்டு இருக்கிறார்.

மக்களுக்கு அபிவிருத்திப் பணிகளை முன்மொழிந்து அதனை செய்து முடிக்கும் அரசியல் தலைமைகளுடன் இணைந்து செயற்படுவது இலகுவான விடயமாகும்,அந்த வகையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகிய இரண்டு அரசியல் தலைமைகளும் பொதுமக்களின் நன்மைக்காக செயற்படுகின்ற போக்கினை கொண்டவர்கள். அவர்களின் தொடரான அபிவிருத்திப் பணிகள் மக்களை சென்றடைய வேண்டும் என அவர்களிடம் கேட்டுக்கொள்வதோடு மட்டக்களப்பு மாவட்ட தொடர் அபிவிருத்தியில் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் காட்டிவருகின்ற அக்கரைக்கும்,கரிசனைக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *