பிரதான செய்திகள்

தாஜூதீன் கொலைக்கு இளங்ககோனும் பொறுப்புக் கூற வேண்டும்

றக்பி வீரர் வசீம் தாஜூதின் கொலை தொடர்பில் முன்னால் காவற்துறை மா அதிபர் என்.கே இளங்ககோனும் பொறுப்பு கூற வேண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த பிரஜைகள் அமைப்பின் இணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் சட்டதின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் ஏற்கனவே முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜப்பானில் 96 வயதில் முதியவர்! கின்னஸ் சாதனை

wpengine

ஷிப்லி பாறுக்கின் மேற்பார்வையின் கீழ் காத்தான்குடி வீதி வேகக் கட்டுப்பாட்டுத் தடைகள்

wpengine

யாழ்ப்பாணத்தில் புதிய கடவுச்சீட்டு அலுவலகம் !

Maash