பிரதான செய்திகள்விளையாட்டு

தாஜூதீனின் கொலை! மறைக்கப்படுமானால் வீதியில் இறங்குவோம்.

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ரக்பி வீரர் வஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைகள் மறைக்கப்படுமானால் அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடப்போவதாக தாஜூனின் குடும்பத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நடைமுறையில் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்ற போதும் ஏனைய விசாரணைகளை போன்று தேக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக தாஜூதீனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசியல் அழுத்தங்கள் காரணமாக இந்த விசாரணைகள் பின்னுக்கு தள்ளப்படக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாஜூதீனின் கொலை தொடர்பில் நீதி நிலைநாட்டப்படாது போனால் தாம் வீதியில் இறங்கி போராடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related posts

தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்

wpengine

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேரூந்து மற்றும் புகையிரத சேவைகள்!

Editor

சமுர்த்தியில் தேர்வு மட்டத்தை அடைந்தவர்களை கௌரவித்த ஜனாதிபதி

wpengine