Breaking
Sun. May 5th, 2024

ஜமைக்காவில் நடந்த தடகள போட்டியின் போது, தசைப்பிடிப்பு காரணமாக ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் அவதிப்பட்டார். இதையடுத்து  ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதனால் ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் கலந்து கொள்வதில் சந்தேகம் இருந்தது. எனினும் லண்டன் டயமண்ட் லீக்கில் பங்கேற்று ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவேன் என உசேன்  அறிவித்திருந்தார்.

லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில்  டயமண்ட் தடகளப் போட்டி நேற்று தொடங்கியது. இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்,  உசேன் போல்ட் 19.89 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். கடந்த 2009ம் ஆண்டு, 200 மீட்டர் ஓட்டத்தை 19.19 வினாடிகளில் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பனமா வீரர் அலான்சோ எட்வர்ட்,  20.04 வினாடிகளில் இலக்கை கடந்து 2வது இடத்தையும், காமன்வெல்த் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றிருந்த பிரிட்டன் வீரர் ஆடம் ஜெமிலி, 20.07 வினாடிகளில் 3வது இடத்தையும் பிடித்தனர்.

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றாலும், ”இன்னும் முழுமையான பார்மில் நான் இல்லை . கடினமாக உழைக்க வேண்டியது இருக்கிறது. எனினும் இந்த வெற்றி நம்பிக்கையை அளித்திருக்கிறது” என உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.

தற்போது 29வயது நிரம்பிய உசேன் போல்ட், பெய்ஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக்கில் 100 மற்றும் 200 ஓட்டப்பந்தயத்திலும்,  ரீலே உள்பட 6 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். ரியோவிலும் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *