Breaking
Sat. May 18th, 2024

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் பல சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள ஜனா­தி­பதி செய­ல­கத்தின் சில தொலை­பேசி இலக்­கங்கள் ஹம்­பாந்­தோட்டை கால்டன் மாளி­கை­யு­டனும் தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவும் அது குறித்து மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தனர்.

புல­னாய்வுப் பிரிவின்  மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பதில் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் எல்­லெ­பொ­லவின் அறி­வு­றுத்­தலின் படி முறைப்­பாட்­டாளர் சார்பில் மன்றில் ஆஜ­ரான அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்க இதனை நீதிவான் நிஸாந்த பீரி­ஸுக்கு அறி­வித்தார்.

வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன் போது இப்­ப­டு­கொலை விவ­கா­ரத்தில் சதி மற்றும் சாட்­சி­யங்கள் அழிப்பு தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­காக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க, மற்றும் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பிரிவின் முன்னாள் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா ஆகியோர் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்­க­வுடன் விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பதில் பொறுப்­ப­தி­காரி  பொலிஸ் பரி­சோ­தகர் எல்­ல­பொல, சார்ஜன் ரத்­ன­பி­ரிய ஆகியோர்  ஆஜ­ராகினர். பாதிக்­கப்­பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி மிஸ்பாஹ் சத்தார் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

இதன் போது மன்றில் மேல­திக அறிக்­கையை சமர்­ப்பித்த புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் எல்­ல­பொல,
சந்­தே­கத்­துக்கு இட­மான ஜனா­தி­பதி செய­லகம் மற்றும் அலரி மாளி­கையை இணைக்கும் அல்­லது தொடர்­பு­ப­டுத்தும் தொலை­பே­சிகள் குறித்த மேல­திக விசா­ர­ணை­களில் அவை ஹம்­பாந்­தோட்டை கால்டன் மாளி­கை­யு­டனும் தொடர்­பு­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­தது

. இது தொடர்பில் விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. சுமார் 400 தொலை­பேசி அழைப்­புக்கள் குறித்து விசா­ரணை தொடர்­கி­றது.

இத­னை­விட வஸீம் தாஜு­தீனின் சட­லத்­தி­லி­ருந்து மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக பெறப்­பட்ட உடற் பாகங்கள் காணா­மல்­போ­னமை தொடர்­பி­லான விசா­ர­ணை­களும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அதன்­படி முன்னாள் சட்ட வைத்­திய அதி­கா­ரி­யான ஆனந்த சம­ர­சே­கர 2013.05.03 அன்று ஓய்வு பெற்­றுள்­ள­மையும் ஓய்வு பெற சில நாட்­க­ளுக்கு முன்னர் தாஜு­தீனின் உடற்­பா­கங்கள் உள்­ளிட்ட மேல­திக ஆய்­வுக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த உடற்­பா­கங்கள் பல­வற்றை 15 பெட்­டி­களில் வாக­ன­மொன்றில் எடுத்துச் சென்­றுள்­ளமை தொடர்பில் சாட்­சிகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

எனவே வழக்குப் பொரு­ளாக கரு­தப்­படும் அரச பொறுப்பில் எடுக்­கப்­பட்ட மேற்­படி உடற்­பா­கங்­களை எடுத்துச் சென்­றமை தொடர்பில் தண்­டனை சட்டக் கோவையின் 367 மற்றும் பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும் என அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் மன்றில் கருத்­தினை முன்­வைத்த சிரேஷ்ட அரச சட்ட வாதி டிலான் ரத்­நா­யக்க, கடந்த தவ­ணையில் மன்று விடுத்த உத்­த­ர­வுக்கு அமைய, 2 ஆவது சந்­தேக நப­ரான அனுர சேன­நா­யக்க தேசிய வைத்­தி­ய­சா­லையில் கட்­டணம் செலுத்தும் அறையில் சிகிச்சை பெறு­வது தொடர்பில் சட்ட மா அதி­பரின் கருத்­தினை மன்­றுக்கு அறி­வித்தார்.

இதன் போது சந்­தேக நபர் சிறை வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர், தேசிய வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பா­ளரின் உரிய அனு­ம­தி­களின் பிர­கா­ரமே கட்­டணம் செலுத்தும் அறையில் சிகிச்சை பெறு­வது தெரி­ய­வந்­துள்­ள­தாக கூறிய அவர், தொடர்ந்தும் அவர் அங்கு சிகிச்சை பெற வேண்­டுமா என்­பது குறித்து தேசிய வைத்­தி­ய­சாலை பணிப்­பா­ள­ரிடம் அறிக்கை கோரு­மாறு நீதி­மன்றில் கோரிக்கை முன்­வைத்தார்.

இந் நிலையில் வாதங்­களை முன் வைத்த சந்­தேக நப­ரான பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரே­ராவின் சட்­டத்­த­ரணி, தமது சேவைப் பெறு­ந­ருக்கு பிணைப் பெற தான் மேல் நீதி­மன்றை நாடி­யுள்­ள­தா­கவும், எனவே தனது சேவைப் பெறுநர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்த புல­னாய்வுப் பிரி­வுக்கு உத்­த­ர­வி­டு­மாறும் கோரினார்.

இத­னை­ய­டுத்து 2 ஆவது சந்­தேக நப­ரான அனுர சேன­நா­யக்க சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி தனது சேவை பெறுநர் தேசிய வைத்­தி­ய­சா­லையில் கட்­டணம் செலுத்தும் அறையில் சிகிச்சை பெறு­வது குறித்து பல்­வேறு தக­வல்கள் வெளி­யி­டப்­ப­டு­வ­தா­கவும் எனினும் உரிய நடை­மு­றை­க­ளுக்கு அமை­யவே அவர் அங்கு சிகிச்சை பெறு­வ­தா­கவும் தெரி­வித்தார். அத்­துடன் கொலை­யா­ளி­களைக் கண்­டு­பி­டிப்­பதை விட பாதிக்­கப்­பட்ட தரப்­புக்கு அனு­ரவின் சிகிச்சை முறையே பிரச்­சி­னைக்­கு­ரி­ய­தாக உள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

எனினும் அனுர சேன­நா­யக்க அங்கு சிகிச்சை பெறு­வ­தற்கு பாதிக்­கப்­பட்ட தரப்பின் சட்­டத்­த­ரணி மிஸ்பாஹ் சத்­தாரும், அரச சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்­கவும் எதிர்ப்பு வெளி­யிட்­டனர்.

இந் நிலையில் அனுர சேனநாயக்க தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் கட்டண அறையில் சிகிச்சை பெற வேண்டுமா என ஆராய்ந்து விரிவான அறிக்கை ஒன்றினை அடுத்த தவணையின் போது மன்றில் சமர்பிக்க கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவுக்கு நீதிவான் உத்தரவிட்டு வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *