அமைச்சர் றிஷாட் பதியுதீன் தன்னைத்தானே சுத்தம் செய்ய வேண்டிய தேவையில்லை சுத்தம் செய்ய அவர் எந்த பிழையும் செய்யவில்லை என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
அதிக பிரயத்தனம் செய்யவேண்டி தான் இருக்கின்றது.காரணம் முஸ்லிம் சமூகத்திற்கு எதாவது பிரச்சினை ஒன்று வருகின்ற போது நேரம்,காலம், சுயநலம் பாராமல் அனைத்து விடயங்களையும் தலைமேல் சுமந்துகொண்டு சமூகத்திற்காக பேசுவதன் விளைவு தான்.
அமைச்சரை காப்பாற்ற வேண்டிய தேவை உங்களை போன்ற அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கொண்டவர்களுக்கு எந்தவித பொறுப்புமில்லை அமைச்சர் றிஷாட் எந்த விதபிழையும் செய்யவில்லை என்ற உண்மையினை தென்னிலங்கையில் உள்ள பல சிங்கள அரசியல்வாதிகள் புரிந்துகொண்ட விடயத்தை கூட இந்த கிழக்கு மாகாண தவம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
சிறுபான்மை சமூகத்தின் தற்போதைய பிரச்சினையினை எந்த இடத்திலும் பேசக்கூடிய அரசியல் தலைமையாக அமைச்சர் இருக்கின்றார் என்ற விடயத்தை சிங்கள இனவாத சிந்தனை கொண்டவர்கள் புரிந்துகொண்ட விடயத்தை கூட கிழக்கு தவம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்பது தான் மிகவும் வேதனையாக இருக்கின்றது.
அமைச்சர் றிஷாட்டின் அரசியல் முதிர்ச்சியினை பற்றி உங்களை போன்ற சில்லறைகளுக்கு தெரியாமல் இருக்கலாம்.ஆனால் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்ச,பிரதமர் ரணில்,மைத்திரி போன்ற அரசியல்வாதிகளுடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால். கடந்த ஜனாதிபதி தேர்தலில் யார் ஜனாதிபதியாக வருவார்கள் என்று முதலில் தீர்மானம் எடுத்தவர் யார்? என்று பலரிடம் கேட்டுதெரிந்துகொள்ளுங்கள்.
அமைச்சர் றிஷாட் கைத்தொழில் அமைச்சராக இருக்கின்ற போது தொழிலதிபர்கள் உரிய ஆவணத்துடன் வருகின்ற போது தேவையான அனுமதியினை கொடுப்பது அமைச்சரின் பணி வேறவர்கள் செய்யும் பிழைக்கு அமைச்சர் மீது எவ்வாறு வீண்பழிகளை சுமத்த முடியும்.
அமைச்சர் மீது சிங்கள இனவாதிகள் கொண்டுவந்த குற்றப்பிரேரணையினை நாங்களும் வாசித்தோம்.அனைத்து விடயங்களும் ஊர்ஜூதம் செய்யப்படாத விடயங்கள் என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்னும் மேலதிகமாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த இரண்டு நாற்களுக்கு முன்பு முன்னால் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் பேசிய ஒடியோவை முழுமையாக கேட்டுப்பாருங்கள் அப்போது உங்களுக்கு தெரியவரும் ஏன் அமைச்சர் மீது மஹிந்த தரப்பு குற்றப்பிரேரணை கொண்டுவந்தார்கள் என்று அறியமுடியும்.
இந்த குற்றப்பிரேரணை அமைச்சர் றிஷாட் கொண்டுவரவில்லை என்ற விடயத்தைக்கூட கிழக்கு தவம் புரியாமல் இருக்கின்றார். அரசியலில் வங்குரோத்து நிலையில் இருக்கின்ற மஹிந்த தரப்பினர் கொண்டுவந்தார்கள் என்ற விடயம் கூட உங்களுக்குபுரியவில்லையா?
அமைச்சர் ஒரு போதும் தியாகியாக நினைக்கவில்லை ஆனால் சமூகத்திற்கு எதாவது பிரச்சினை ஒன்று வருகின்ற போது ஏனைய அரசியல்வாதிகளை போன்று வாய்மூடி மௌனியாக இருக்கமாட்டார். என்பதை நீங்கள் முதலில் புரிந்தும் சின்னப்பிள்ளை தனமான முகநூல் பதிவினை மேற்கொண்டு இருக்கின்றீர். என்பது மனவேதனையான விடயமாக இருக்கின்றது.
அமைச்சர் றிஷாட் முஸ்லிமாக இருப்பதன் காரணமாக தான் சிங்கள பேரினவாதிகள் இந்த குற்றப்பிரேரணை கொண்டுவந்துள்ளார்கள் என்பதை நன்றாக யோசித்து புரிந்துகொண்டால் மேலும் சிறப்பாக இருக்கும்.
அமைச்சர் றிஷாட்டை காப்பாற்ற உங்களை போன்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்கள் உதவி செய்ய வேண்டும். அல்லாஹ்வின் உதவியும்,பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,தாய்மார்கள்,பெண்கள்,வயோதிபர்கள்,உலமாக்கள் ஆகியோரின் துஆ பிராத்தினை உண்டு