பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தனிமையில் இருந்த குறித்த யுவதி தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணம், நல்லூர் – சங்கிலியன் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம் சிவசாயினி (வயது – 20) என்ற இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.


வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் திருமண நிகழ்வு ஒன்றுக்காக வெளியில் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த குறித்த யுவதி தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற குறித்த மாணவி, கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கின் எழுச்சிக்கு ஊடகவியலாளர்கள் மிகப்பெரும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

wpengine

காதீ நீதி மன்றத்தை அவமதித்தவருக்கு நீதி மன்ற பிடியானை

wpengine

மாகாண எல்லை நிர்ணயம்! மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறவேண்டும்

wpengine