டொல்பின் ஒன்றை காதலித்து வந்த நபர் ஒருவர் அதனுடன் ஆறு மாதம் உறவில் இருந்த விநோத சம்பவம் புளோரிடாவில் இடம்பெற்றுள்ளது.
63 வயதான மால்கம் ப்ரென்னர் என்ற குறித்த நபர் இது குறித்து புத்தகமொன்றையும் எழுதியுள்ளார்.

மால்கம் கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் சரசோட்டாவில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில் பணிபுரிந்தபோது, அங்கு இருந்த டோலி என்ற டொல்பினுடன் அவருக் தொடர்பு ஏற்பட்டதாகவும், சுமார் 6 மாதங்கள் வரை அதனை காதலித்து வந்ததாகவும், இதன் போது டொல்பினுடன் உடல் ரீதியாக தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
எனினும் பின்நாளில் டோலி வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும், ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் அவரது பிரிவை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
டோலியின் மரணத்திற்குப் பின்னர், ப்ரென்னரும் ஐந்து வருடங்கள் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.