Breaking
Sun. Nov 24th, 2024

பிரிவினைவாத சமஷ்டி அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கலகொட அத்தே ஞானசார தேரரின் இருப்பு அத்தியவசியமானது என சிங்கள ராவாய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புலனாய்வு பிரிவினருக்காக குரல் கொடுத்தமையால், அவர் தற்போது சிறை சோறு சாப்பிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஞானசார தேரர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவது தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஞானசார தேரரை பொதுமன்னிப்பு கீழ் விடுவிக்க ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அது வெற்றியளிக்கும் தருவாயில் இருக்கும் போது, சில குழுக்களும் அணிகளும் ஞானசார தேரரை தமது அரசியல் நோக்கங்களுக்கான பயன்படுத்த முயற்சித்து வருகின்றன.

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஞானசார தேரரை வேறு ஒரு அரசியல் அணியுடன் சம்பந்தப்படுத்த முயற்சித்து வருகின்றனர். ஆளும் கட்சியில் உள்ளவர்கள் மற்றுமொரு கோணத்தில் பார்த்து வேறு ஒரு அரசியல் அணியில் சம்பந்தப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இந்த இரண்டு அணிகளுடனும் சம்பந்தப்படாது நடு நிலையில் இருப்போர், ஞானசார தேரரை, மேற்படி இரண்டு அணிகளுடன் சம்பந்தப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

ஞானசார தேரர் என்ற தனிமனிதரை விட பிக்கு ஒருவர் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாவே நாங்கள் காண்கின்றோம். காவியை சிறைப்படுத்தியுள்ளனர். அந்த பிக்குவை விடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க பணி எமக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிக்குகள் என்ற வகையில் இது எம் அனைவருக்குமான பொது விடயம். இதன் காரணமாகவே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்குமாறு முழு பௌத்த சங்க சமூகமும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஞானசார தேரர் நாட்டில் குற்றங்களை செய்தவர் அல்ல. வேறு குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர் அல்ல. ஞானசார தேரர் நாட்டின் புலனாய்வு பிரிவுக்காக குரல் கொடுத்தார்.

தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பெரும்பாலானோர் தயங்கலாம், ஆனால் இது உண்மை.
ஞானசார தேரர் தொடர்ந்தும் இதனை சமூகத்திற்கு கூறி வந்தார், வண்ணாத்துவில்லு பகுதியில் பாரிய ஆயுத களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றை ஞானசார தேரர் முன்கூட்டியே கூறியிருந்தார்.
அந்த ஆயுதங்களை பயன்படுத்தி பௌத்த விகாரைகளை தாக்க திட்டமிட்டுள்ளனர். இவற்றையே ஞானசார தேரர் பேசினார். அவை தற்போது உண்மையாகி வருகின்றன.

ஞானசார தேரர் பேசிய தோரணை பார்க்க வேண்டாம், அவர் முன்வைத்த வாதங்க விவாதங்களை பாருங்கள். அவற்றின் உண்மையை பாருங்கள்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *