Breaking
Sat. May 18th, 2024

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு சட்டத்தரணிகள், ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.
இந்த மன்னிப்பு வழங்கப்படுமானால், அது கொண்டு வரப்போகும் தாக்கம் என்ன என்பதை பற்றியும் சிந்திக்குமாறு இந்த சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பே இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கையில் சட்டத்தரணிகளான லால் விஜயநாயக்க ஜேசி வெலியமுன் உட்பட்டோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஞானசார தேரரை பொறுத்தவரையில் அவர் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை கொண்டு வந்தவராவார்.

நாட்டின் இனப்பிரச்சினை மற்றும் மதப்பிரச்சினைகளின் போது அவை தீவிரமாக மாறுவதக்கு ஞானசார தேரரே காரணமாக இருந்துள்ளார்.

சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து தூசித்ததன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு மன்னிப்பை வழங்குவது அதிகார துஸ்பிரயோகமாகவே கருதப்படும் என்றும் ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *