செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 27 வாகனங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான மேலும் 27 சொகுசு மற்றும் செயலிழந்த வாகனங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. இதற்கான விலைகள் கேள்வி அறிவிப்பு மூலம் கோரப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள், 1991, 2000, 2005, 2006, 2007, 2010, 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவைகள் ஆகும். அதன்படி, பி.எம்.டபிள்யூ. 02 கார்கள், 02 ஃபோர்டு எவரெஸ்ட் ஜீப்புகள், 01 ஹூண்டாய் டெர்ரகன் ஜீப், 02 லேண்ட் ரோவர் ஜீப்கள், 01 மிட்சுபிஷி மான்டெரோ, 05 நிசான் மோட்டார் கார்கள், 06 V8 கார்கள், 01 லேண்ட் க்ரூஸர் சஹாரா ஜீப், 05 சாங்யோங் ரெக்ஸ்டன் ஜீப்கள், 01 போர்ஷே கெய்ன் கார் மற்றும் 01 மிட்சுபிஷி ரோசா குளிரூட்டப்பட்ட பஸ் ஆகியவையே விற்பனைக்கு தயாராகவுள்ளன.

சம்பந்தப்பட்ட ஏல விற்பனைக்கான கேள்வி கோரலுக்கான கட்டணத்தை (23) முதல் மே 14 ஆம் திகதி வரை ஜனாதிபதி செயலகத்தின் நிதிப் பிரிவில் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான 14 சொகுசு வாகனங்கள், 6 செயலிழந்த வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெற்றது.

அரசாங்க செலவினங்களைக் குறைத்து நிதிப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை விற்பனை செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 9 டிஃபென்டர் ஜீப்புகள், ஒரு வால்வோ ஜீப், ஒரு கிரைஸ்லர் கார், ஒரு மஹிந்திரா பொலிரோ, ஒரு ரோசா பஸ், ஒரு டிஸ்கவரி மற்றும் ஒரு டொயோட்டா கார் உட்பட 15 வாகனங்கள் ஏலம் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலுக்கு ஆதரவு றிஷாட்,ஹக்கீம் ஐ.தே.க தெரிவிப்பு

wpengine

மூத்த பத்திரிகையாளர் எம்.கே. முபாரக் அலியின் மறைவு குறித்து அமைச்சர் றிஷாட் அனுதாபம்!

wpengine

5வது உதா கம்மான தயா கம்மான விட்டுதிட்டத்தை திறந்துவைத்த சஜித்

wpengine