Breaking
Sat. Apr 27th, 2024

அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


டை, ஒசரி சாரி, சாரி, மாலைகள், மோதிரங்கள் உள்ளிட்ட ஆடைகள் ஆபரணங்கள் என்பனவற்றை அணிந்து வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாகரீகமான முறையில் சாதாரண ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்க முடியும் என சுதேச விவகார, உள்ளுராட்சி மன்ற, மாகாணசபைகள் அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் போது பணியாளர்கள் எவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.


கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் தொடர்பில் மிகவும் இலகுவான நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் மே மாத இறுதி வரையில் அவர்களை பணிக்கு அழைக்காதிருக்க முடிந்தளவு முயற்சிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏதேனும் காரணத்திற்காக இவ்வாறானவர்களை அழைக்க நேரிட்டால் அவர்களது வீட்டுக்கு மிக அருகாமையில் உள்ள காரியாலயமொன்றில் அவர்களை பணிக்கு அமர்த்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பில் குறித்த பெண் உத்தியோகத்தர்கள் எழுத்து மூல கோரிக்கை முன்வைக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அலுவலகங்களுக்குள் பிரவேசிக்க முன்னதாக அனைத்து ஊழியர்களும் கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும் எனவும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் முகக் கவசங்கள் அணியப்பட வேண்டும் எனவும் அந்த சுற்று நிருபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *