பிரதான செய்திகள்

சென்னையில் பேஸ்புக் காதல்! பெண் ஆசிரியை கொலை

சென்னை அண்ணாநகர் பகுதியில் கார் ஏற்றி நிவேதிதா என்ற பெண் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வருபவர் இளையராஜா.இவருக்கு பள்ளி ஆசிரியை நிவேதிதா என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கணபதி என்ற மற்றொரு நபருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவேதிதாவிற்கு பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளையாராஜா, சென்னை அண்ணாநகர் பகுதியில் வைத்து நிவேதிதா மீது காரை வேகமாக மோதச் செய்துள்ளார். இதில் நிவேதிதா படுகாயமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நிவேதிதா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறை இளையாராஜவை கைது செய்தது. மேலும் கணபதியிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

wpengine

காட்டு யானைகளுக்கு விரைவில் வைத்தியசாலை: சுற்றாடல் அமைச்சர்.

Maash

சமுர்த்தி பயனாளி இரண்டாம் கட்ட கொடுப்பனவு ஏப்ரல் 10க்கு முன்

wpengine