Breaking
Sun. Nov 24th, 2024

(அஷ்ரப் ஏ சமத்)
இலங்கையின் 73வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இஸ்லாமிய மத நிகழ்வுகளும் நாட்டுக்காகவும்  உயிா்நீா்ததவா்களுக்காகவும் நாட்டின் சுபீட்சத்திற்கும் துஆப் பிராத்தனைகள் இடம்பெற்றன. அத்துடன்  பள்ளிவாசலில் முன்றலில்  சுதந்திரக் கொடியேற்றும் நிகழ்வு இன்று 4 காலை 06.30 மணிக்கு பம்பலப்பிட்டி் நிமல் வீதியில் உள்ள ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. 


நிகழ்வுகள் முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளா் அஷ்ஷேக் அஸ்ரப் அவா்கள் தலைமை தாங்கினாா்.  பிரதம அதிதியாக நீதியமைச்சரும் ,ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி, பள்ளிவாசலின் முன்றலில் தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். அத்துடன் ஊவா மாகாண சபயைின்  ஆளுனா் ஏ.ஜே.எம். முஸம்மில் உட்பட  முஸ்லிம் பிரநிதிகள் அதிதிகளும்  கலந்து கொண்டனா். 

பிரதமந்திரியின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளா் அஷ்ஷேக்  ஹசன் மௌலானா மற்றும் ்இஸ்ஹானிய அரபுக் கல்லுாாி பிரதி அதிபா்  மப்ருக் மௌலவியும் தமிழ் சிங்கள மொழிகளில் துஆப் பிராத்தனை நிகழ்த்தினாா்கள்.  


இங்கு உரையாற்றிய நீதியமைச்சா் அலி சப்ரி  இலங்கையின் சுதந்திரத்தில் காலம் சென்ற டி.பி ஜாயாவை நினைவுட்டினாா். சுதந்திரத்தினை பெறுவதற்காக   டி.பி ஜாயாவின் அன்று ஒரு உறவுப் பாலமாக செயல்பட்டாா்.

அவரின்  முயற்சியினை அன்று பாராளுமன்றத்தில் காலம் சென்ற பிரதம மந்திரி  எஸ.டபிள்யு  பண்டாரநாயக்க  ஜாயாவை பாராட்டிச் பேசினாா். என நீதியமைச்சா் தெரிவித்தாா்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *