Breaking
Mon. Nov 25th, 2024
SAMSUNG CSC

(அஷ்ரப் ஏ சமத்)

பாக்கிஸ்தான் நாட்டின் 70வது சுதந்திர தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று (14) காலை கொழும்பு -7 ல் உள்ள பாக்கிஸ்தான் உயா் ஸ்தானிகா் ஆலயத்தில் உயா் ஸ்தானிகா் மேஜா் ஜெனரல் செயத் சக்கீல்  ஹூசைன் தலைமையில் சுதந்திர தின வைபவம் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பாக்கிஸ்தான் தேசிய கீதத்தை இயற்றிய உயா் ஸ்தானிகா்  பாக்கிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.

இந் நிகழ்வில் இலங்கை வந்துள்ள பாக்கிஸ்தான் பிரதம நீதியரசா் அன்வா் சக்கீல் ஜமால் மலிக் பிரதம அதிதியாகக்  கலந்து கொண்டாா்.

இங்கு உரையாற்றிய உயா் ஸ்தானிகா்…

தெற்காசிய பிராந்தியத்தினதும் முழு உலகத்தினதும் எதிா்காலததினை உறுதிசெய்வதற்கு பொருளாதார ஒத்துழைப்புடன் கூடிய பிரச்சினைகளுக்கான அமைதியான தீா்வுகள் அவசியம் என பாக்கிஸ்தான் உயா் ஸ்தானிகா் மேஜா் ஜெனரல்  சையத் சகில் ஹூசைன் குறிப்பிட்டாா்.

மேலும் தெரிவிக்கையில்…

பாக்கிஸ்தான் அனைத்து நட்பு நாடுகளுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அயல் நாடுகளுகளுடன் அமைதியான உறவினைப் பேனுவதற்கும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும்  பாக்கிஸ்தான் மக்கள் தமது நாட்டினை துாய்மையான ஜனநாயக நாடாகவும் வளமான தேசமாகவும் உருவாக்குவதற்கு ஒருமனதாக செயற்படுவதாக தெரிவித்தாா்.

 இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையிலான  வரலாற்று ரீதியான உறவானது கலை கலாச்சாரம் மற்றும் இன்று தொட்டு வெளி நாகரீகம் தொட்டு பழமை வாய்ந்தது எனவும் இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.SAMSUNG CSC

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பாக்கிஸ்தான் பிரதமா் நவாஸ்செரிப் இரு நாடுகளுக்கிடையில்  உறவின் முக்கியத்துவம் சிறந்த சாட்சியாகும். அவரின் விஜயத்தின்போது  இரு நாடுகளது உயா் கல்வி, கைத்தொழில்,  அபிவிருத்தி, கப்பல்துறை, அணுவாயுத தொழிநுட்பத்தினை ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அத்துடன்  சமாதான நடவடிக்கைகளுக்க பயன்படுத்துதல், மற்றும் நிபுணத்துவா்களை பறிமாறிக்கொள்ளுதல், போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பினை அதிகரிக்க இணக்கம் காணப்பட்டதுடன் உயா்மட்ட துாதுக்குழுக்கள் மூலம் அத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகும் அவா் சுட்டிக் காட்டினாா்.

SAMSUNG CSC
இந் நிகழ்வில் இலங்கை -பாக்கிஸ்தான் நட்புறவு மற்றும் முதலீட்டு அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையில் வாழும் பாக்கிஸ்தானியா்களும் கலந்து கொண்டனா்.

SAMSUNG CSC

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *