பிரதான செய்திகள்

சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் பாடசாலைகளை திறந்து நடத்தி செல்ல முடியும்

தீவிர சுகாதார பாதுகாப்பு வழிக்காட்டலின் கீழ் பாடசாலைகள் நடத்தி செல்லப்படும் என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் நோயாளர் பாரிய அளவில் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான சுகாதார பாதுகாப்பு வழிக்காட்டலின் கீழ் பாடசாலைகளை நடத்தி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றாளர்கள் குறையும் சந்தர்ப்பங்களில் குறைந்த சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் பாடசாலைகளை திறந்து நடத்தி செல்ல முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் இணைந்து இது தொடர்பில் சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க நடவடிக்கை எடுப்பார்கள். அதனை திறப்பதற்கு தாமதப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதென தான் ஒரு போதும் நினைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதியாக மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமனம்!

Editor

கொலையை மூடி மறைத்து பிரேத பரி­சோ­தனை அறிக்கை

wpengine

தலைவர்கள் கூட்டம் தீர்மானம் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது.

wpengine