அடுத்து வரும் சில மாதங்களில் அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டு வர இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த அமைச்சரவை திருத்தத்தின் ஊடாக அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் பலர், தற்போது வகிக்கும் அமைச்சு பதவிகளை இழக்க வாப்புள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவுகளுக்கு பாதிப்பேற்படுத்தும் வகையில் செயற்படுகின்ற பிரபல அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இந்நிலையில் குறித்த அமைச்சர்கள் தொடர்பில் அமைச்சரவைக்குள்ளும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொது மக்களின் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள குறித்த அமைச்சர்கள் தொடர்ந்து அமைச்சரவையில் பதவி வகிப்பதால், அரசாங்கத்தை நடத்தி செல்வதற்கும், உறுதிப்பாட்டுக்கு பாதிப்பேற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளமையினால் அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக 92 பேர் கொண்டுள்ள தற்போதைய அமைச்சரவை எதிர்வரும் சில நாட்களில் மேலும் அமைச்சரவை அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஒவ்வொரு என்ற ரீதியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
தேசிய அரசாங்கம் அமைக்கும் போது அமைச்சரவை 95 பேரை கொண்டிருக்க வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய இந்த அமைச்சர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.