மன்னார்-சிலாவத்துறை நீர்பான திணைக்களத்தின் அசமந்த போக்கினால் முசலி பிரதேச மக்கள் சிறுபோக வேளாண்மை மேற்கொள்ள முடியவில்லை என அறியமுடிகின்றது.
அகத்திமுறிப்பு நீர்தேக்கத்தின் ஊடாக 12ஆம் வாய்க்கால் பகுதியில் இருந்து குளங்களுக்கு நீர் செல்லும் பிரதான வாய்க்கால் சீர்யின்மையினால் சிறுபோகம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு சரியான முறையில் உரிய நேரத்திற்கு நீர் சொல்ல முடியாத நிலைகாணப்படுவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் 12ஆம் வாய்க்கால் ஊடாக சுமார் 10க்கும் மேற்பட்ட பெரிய நீர்பாசன குளங்களுக்கு நீர் செல்லும் பகுதியாக காணப்படுகின்றது.
அத்துடன் உரிய முறையில் வாய்க்கால்கள் சீர்செய்யப்பாடாமையினால் சிறுபோகத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொள்ள முடியவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
சிறுபோக வேளாண்மை மேற்கொள்ள சரியான முறையில் 12ஆம் வாய்க்கால் பூணர்நிர்மானம் செய்யப்படுமா? உரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா? உரிய காலத்தில் சிறுபோக வேளாண்மை மேற்கொள்ள வாய்க்கால்கள் புனர்நிர்மானம் செய்யப்படுமா?