Breaking
Sat. Nov 23rd, 2024

கவிஞர் கால்தீன்.

காலம் நடந்து சென்ற பின்பு கட்டுக் கதைகளையும், ஏமாற்று வித்தைகளையும் பரப்புரை செய்வதற்கு, மீண்டும் ஒரு தேர்தலில் கிழக்கு வாழ் மக்களை ஏமாற்றி அதிகாரத்திற்கு வருவதற்கு முயற்சிக்கும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு, மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்ற நம்பிக்கை வீணாகமாட்டாது எனக் கருதுகிறேன்.

புதிய வெளிச்சங்களோடு, சத்தியத்தை கரம்பிடித்து, மக்களிடம் தெளிவான உண்மைகளை எடுத்துரைக்க கிழக்கை நோக்கி வந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் வாகனத்தைக் கண்ட ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

அந்த கோபதாபத்தின் வெளிப்பாடே, இன்று சமூக வலைத்தளங்களில் ரிஷாட் பதியுதீனையும், கட்சியையும் படுமோசமாக விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாமல் குறிப்பாக, அம்பாரை மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய தர்மவாதி ரிஷாட் பதியுதீன் அவர்கள், பல கோடி ரூபாய்களை அபிவிருத்திக்காக செலவு செய்தது மட்டுமல்லாமல், நமது சிறுபான்மைச் சமூகத்திற்காக பாராளுமன்றத்தில் குரல்கொடுத்து, அநியாயங்களைத் தட்டிக் கேட்பதனால்தான் இன்று அவர் விமர்சிக்கப்படுகிறார்.

இது எமக்குப் புதிதல்ல.
1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நீதிக்காகப் போராடியவர்களை நீதியற்றவர்கள் விமர்சித்து, வீண்பழி சுமத்திய வரலாறுகளும் உண்டு.

ஆகவே,
கிழக்கு வாழ் என் உடன்பிறப்புக்களே!
வன்னி வாழ் என் சகோதர்களே!
பொய்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.

நமது உரிமைக்கான வழியும்,
நமது சரியான பயணமும்
சத்தியமாகவே, அது அகில இலங்கை மக்கள் காங்கரஸில்தான் இருக்கின்றன. இந்த யதார்த்தத்தை உணர்ந்து, எல்லோரும் ஒருமித்த சிந்தனையில் நமது கட்சியை வாழவைப்போம்
வாருங்கள்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *