உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

சிங்கப்பூரில் மீண்டும் பிரதமராகிறார் லோரன்ஸ் வோங்.

சிங்கப்பூர் பொதுத்தேர்தல் சனிக்கிழமை (3) இடம்பெற்றது, ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், லோரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராகிறார். 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது

அதன்படி சிங்கப்பூரில் 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இடம்பெற்றது. இதில் 30 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். காலை வாக்குப்பதிவு ஆரம்பமாகியதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளைப் பதிவுசெய்தனர்.

இந்தத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது. 

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகியது. ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. இதையடுத்து லோரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராகிறார். .

பிரீத்தம் சிங் தலைமையிலான எதிர்க்கட்சி 26 தொகுதிகளில் போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிங்கப்பூரின் பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈஸ்டர் தாக்குதல்! நீதி கோரி வத்திக்கானில் புனித ஆராதனை

wpengine

கணவனின் காதல் லீலை! மனைவி தற்கொலை

wpengine

இத்தாலி நகரமொன்றில் வீடற்றவர்களுக்கு உதவினால் அபராதம்!

wpengine