பிரதான செய்திகள்விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி! இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மழையால் பாதிப்பு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. ‘பி’ பிரிவில் இடம்பெற்று உள்ள இந்திய அணி தனது முதல் லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் இன்று பர்மிங்காமில் மோதுகிறது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. பாகிஸ்தான் தன்னுடைய பந்து வீச்சு பலத்தை காட்ட முயற்சிக்கும் வேளையில் இந்திய அணி நிதானமான, நிலையான ஆட்டத்தை தொடர்ந்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் தவான் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 9.5 ஓவர்கள் வரையில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ரோகித் சர்மா 25 ரன்களுடனும், தவான் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மைதானம் நனையாமல் இருக்க நடவடிக்கை ஏற்பட்டது. மழை நின்றதும் ஆட்டத்தை தொடங்குவதற்கான சூழ்நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது, மைதான ஆய்வு பணி முடிந்ததும் போட்டி மீண்டும் தொடங்கியது.

ரோகித் சர்மா, தவான் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்தியா 21 வது ஒவரில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்து இருந்தது,  தவான் – 59 ரன்களுடனும் ரோகித் சர்மா 57 ரன்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்திய அணியின் நேர்த்தியான ஆட்டத்தை அடுத்து இந்திய வீரர்கள் கொண்டாடினர். இந்நிலையில் 24.3-வது ஓவரில் இந்திய 136 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஷாதாப் கான் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து தவான் 68 ரன்களில் (65 பந்துக்கள், 6 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) அவுட் ஆனார். ஷாதாப் கான் 18 வயது நிரம்பியவர்.

இதனையடுத்து விராட் கோலி களத்தில் இறங்கினார். ரோகித் சர்மாவுடன், விராட் கோலி கைகோர்த்து விளையாடிய நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டு உள்ளது.

 இந்தியா 33.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது முறையாக மழை பெய்ய தொடங்கியது.

Related posts

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான ஊடக பயிற்சி நெறி! தமிழில் தேசிய கீதம்

wpengine

அய்யூப் அஸ்மீனை வன்மையாக கண்டிக்கும் வட மாகாண சபை உறுப்பினர் றயீஸ்

wpengine

சவுதி விஜயத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது டிரம்ப்

wpengine