முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை குண்டு அங்கியும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அப்பொருட்கள் வௌ்ளவத்தைப் பகுதிக்கு எடுத்துவருதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக குறிப்பிட்டு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பட்ட போது முன்னாள் அமைச்சரிடம் அதுகுறித்து விசாரணை செய்யப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கஜந்த கருணாதிலக்க தெரிவித்திருந்தார்.
இதனையடுத்தே நேற்றையதினம் அவ்விடயம் குறித்து அவரிடத்தில் விசாரணை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்பு பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்பு பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.