Breaking
Fri. Apr 19th, 2024

முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வில் ஆஜராகியுள்ளார்.

கடந்த புதன்­கி­ழ­மை­யன்று சாவ­கச்­சேரி மற­வன்­பு­லவு பகு­தியில் உள்ள வீடொன்­றி­லி­ருந்து தற்­கொலை குண்டு அங்­கியும் வெடி­பொ­ருட்­களும் மீட்­கப்­பட்­டி­ருந்­தன.

இது­தொ­டர்­பாக ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் கலந்­து­கொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் அப்­பொ­ருட்கள் வௌ்ளவத்தைப் பகு­திக்கு எடுத்­து­வ­ரு­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­தாக குறிப்­பிட்டு கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து இவ்­வி­டயம் தொடர்­பாக அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கேள்­வி­யெ­ழுப்­பட்ட போது முன்னாள் அமைச்­ச­ரிடம் அது­கு­றித்து விசா­ரணை செய்­யப்­ப­டு­மென அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் அமைச்சர் கஜந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்தே நேற்றை­ய­தினம் அவ்­வி­டயம் குறித்து அவ­ரி­டத்தில் விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­காக குற்­றப்­பு­ல­னாய்பு பிரிவு முன்­னி­லையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று குற்­றப்­பு­ல­னாய்பு பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *