மன்னார் மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வருடாந்த சம்மேளன பொதுக்கூட்டம் மாவட்ட மட்ட தொழில் சங்கத்தின் ஏற்பாட்டில் (30)நேற்று மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது மாவட்ட மட்ட தொழில் சங்க தலைவர் தொடர்ந்து உறையாற்றுகையில் கடந்த வருடங்களை விட தற்போது மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகளை பேசி தீர்த்துகொள்ளக்கூடிய சுமூகமான நிலை இன்று மன்னாரில் ஏற்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட செயலகத்திற்கு புதிய அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்களும் நேரடியாக பேசி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்குகின்ற தொழில் ரீதியான பிரச்சினைகளை தீர்க்ககூடியதாக இருக்கின்றது.
ஆனால் கடந்த காலங்களில் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களை பதவி நிலை உயர் அதிகாரிகள் “நினைத்தவாறும்,ஏனையவர்களை திருப்திப்படுத்தவும் மேற்கொண்டார்கள் அதனால் உயர் அதிகாரிகளும் தொழில் சங்கத்திற்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.
ஆனால் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற இடமாற்றத்தில் மாவட்ட இடமாற்ற சபைக்கான உறுப்பினர் மற்றும் பிரதேச செயலக ரீதிரியான இடமாற்ற சபைக்கான தொழில் சங்க பிரதிநிதிகளை இணைத்துகொள்ள மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பணிப்பாளர் ஆவணம் மேற்கொண்டார்கள்.
அதே போன்று சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பல பிரச்சினைகளை அரசாங்க அதிபருடன் ,மாவட்ட பணிப்பாளருடனும் நேரடிகவும் தொலைபேசியில் கூட பேசி தீர்வுகளை பெற்று இருக்கின்றோம்.
கலந்த காலங்களை விட தற்போது அதிகமான உத்தியோகத்தர்கள் தொழில் சங்க கூட்டத்திற்கு வருகை தந்து இருக்கின்றீர்கள் என்ற விடயத்தை பார்க்கின்ற போது மாவட்ட தொழில் சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் அதீகரிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.எனவும் தெரிவித்தார்.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய தொழில் சங்கத்தின் பொதுச்செயலாளரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜெகத் குமார் தலைவர் ,பொருளாலர் மற்றும் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்கள்.