இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இவ்வாறு முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர், இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர், மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையை அடுத்து, பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் போன்ற சமூக ஊடக வலையமைப்பின் பயன்பாடு தற்காலிக அடிப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கடந்த ஆறாம் திகதி முதல் சமூக ஊடக வலையமைப்பின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதன் ஊடாக, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1978 அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.