பிரதான செய்திகள்

சமுர்த்தி பயனாளிக்கு 10000ரூபா முற்பணம்! அமைச்சரவை

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு முற்பணமாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து செல்வதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருப்பதால் நாளாந்தம் வருமானம் பெற்று தமது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வந்த பல குடும்பங்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் அவர்கள் தமது அத்தியாவசிய தேவைகளை குறைந்தளவேனும் நிவர்த்திசெய்து கொள்வதற்கான முன்னேற்பாடாக சமுர்த்தி பெறும் பயனாளிகளுக்கு முன்னேற்பாடாக 10 ஆயிரம் ரூபா நிதியை வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதுடன் அதற்கான அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பித்துள்ளேன்.

அத்துடன் குறித்த கொடுப்பனவை கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக அகன்ற பின்னர் அதை அவர்களிடமிருந்து மீளப் பெறுவதா? அல்லது நிவாரணமாக வழங்குவதா என்பது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து அது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ரணில்,மைத்திரி ஆட்சியில் வாகனப் பதிவு கட்டணம் அதிகரிப்பு

wpengine

ஆண் விபச்சாரிகள் இணைந்தே நாட்டு சம்பந்தமான தீர்மானங்களை எடுக்கின்றனர்.

wpengine

இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் மின் வழங்கள் வழமைக்கு திரும்பும் -மின்சார சபை

wpengine