பிரதான செய்திகள்

சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ரணிலுடன் மோதல்

மாத்தளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பகிரங்க மோதல் போக்கை வௌிப்படுத்தியுள்ளார்.

மாத்தளை மாவட்டத்தின் 3000 சமுர்த்தி பயனாளிகளுக்கான நிவாரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாத்தளை எட்வர்ட் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

எனினும் சமுர்த்தி பயனாளிகள் தெரிவின் போது ஒருதலைப்பட்சமாக தெரிவுகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்து பிரதமர் கலந்து கொள்ளும் இன்றைய வைபவத்தை புறக்கணிக்கப் போவதாக ரோஹினி குமாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தான் நேரில் சந்தித்து பிரதமருக்கு விளக்கமளிக்க முற்பட்ட போதிலும் பிரதமர் ரணில் தனக்கு கிடைத்துள்ள தவறான தகவல்களை நம்பிக்கொண்டு தனது விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ரோஹினி குமாரி குற்றம் சாட்டியுள்ளார்.

அதன் காரணமாக பிரதமரின் இன்றைய வைபவத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள அவர், எதிர்வரும் நாட்களில் பொதுமக்களின் கருத்தறிந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Related posts

சமுகவலைத்தளத்தில் பிரதமர் உடன் சண்டை போடும் நாமல் ராஜபக்ச

wpengine

முஸ்லிம் ஆட்டோ சாரதி சுட்டுக்கொலை

wpengine

3வருடங்களின் பின் பிணையில் விடுதலையான சஹ்ரானின் மைத்துனர் மீண்டும் கைது!

Editor