பிரதான செய்திகள்

சமாதானத்தையும், நீதியையும் நிலைநிறுத்தக் கோரி மன்னாரில் சமாதானப் பேரணி

சமாதானத்திற்கான உதயம் அமைப்பும், மன்னார் மாவட்ட பிரஜைகள் சபை ஒன்றியமும் இணைந்து “சமாதானத்தையும், நீதியையும் நிலை நிறுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் மன்னாரில் சமாதான பேரணி ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பேரணி மன்னார் பொது விளையாட்டு மைதான பிரதான வீதியில் இன்று காலை 10 மணிக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சமாதானப் பேரணி மன்னார் பிரதான வீதியூடாகச் சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்துள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர்கள் வன்முறை தொடர்பில் மன்னார் மாவட்டத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தொலைபேசி இலக்கங்கள் உள்ளடங்கிய விளம்பரப்பதாதை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.625.157.560.350.160.300.053.800.279.160.70 (1)

குறித்த விளம்பரப் பலகையினை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரஜைகள் சபையின் பிரதி நிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் உற்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.625.157.560.350.160.300.053.800.279.160.70 (2)

Related posts

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டை சீரழிக்க நான் இடமளிக்க மாட்டேன் – ரணில்

wpengine

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் ,உயர் ஸ்தானிகர்கள் பிரதமருடன் சந்திப்பு

wpengine

ஊடகவியலாளர் படுகொலைகள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் -ஹிஸ்புல்லாஹ்

wpengine