பிரதான செய்திகள்

சட்ட விரோத மணல் அகழ்வு நடைபெறும் இடத்திற்கு ரவிகரன் விஜயம்

புலிமச்சிநாதிக்குள கிராமத்திற்கு செல்லும் கனகராயன் ஆற்றில் சட்ட விரோத மணல் அகழ்வு மிகவும் பாரியளவில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கருத்துத்தெரிவிக்கையில்,

ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புலிமச்சிநாதி குளம் கிராம மக்கள் தமது பகுதியை அண்டிய கனகராயன் ஆற்றுப் பகுதியில் மணல் அகழ்வு மிக மோசமாக நடைபெறுவதாக தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சட்டவிரோத மண் அகழ்வு இடம் பெற்றுள்ளதை நேரில் சென்று உறுதிப்படுத்தியுள்ளேன்.

குறிப்பிட்ட இடத்தில் மணல் அகழ்வு செய்த ஒருவருக்கு மாதமொன்றிற்கு 1260கியூப் மணல் அகழ்வுக்கு புவிச்சரிதவியல் பணியகத்தினரும் பிரதேச செயலாளரும் அனுமதிகள் வழங்கியிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மணல் ஏற்றச்செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட இடங்கள் விவசாயிகளின் வயல் நிலங்களாக இருப்பதையும் தமது வயல் வரம்புகள் மற்றும் வேலிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு கடும் தரைகளாக வயல் நிலங்கள் மாறியிருப்பதையும் விவசாயிகள் சுட்டிக்காட்டினார்கள்

குறித்த மண் அகழ்வு தொடர்பில் வனஇலாகா பிரிவினர் கையூட்டுக்களைப் பெற்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சமூகத்தை தனக்காக மட்டும் சொந்தமாக்குதல்

wpengine

கிழக்கு தமிழ் பாடசாலைகளை தரமுயர்த்தும் கிழக்கு ஆளுநர்

wpengine

வாழ்வாதரம் என்ற போர்வையில் மன்னாரில் கேஸ் வழங்கிய காதர் மஸ்தான்

wpengine