Breaking
Tue. Nov 26th, 2024

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படும் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லடி, திருப்பெருந்துறை பகுதியில் உள்ள அரச திணைக்களம் ஒன்றுக்கு ஒதுக்கப்பட்ட காணியில் கோயில் அமைக்கும் நடவடிக்கையினை சிலர் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற பிரதேச கிராம சேவையாளர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பொலிஸார் குறித்த ஆலயம் அமைக்கும் பணிகளை இடை நிறுத்தியுள்ளனர்.

எனினும், குறித்த பகுதி பற்றைக்காடாக கிடந்ததாகவும், அதனை தூய்மைப்படுத்தி ஆலயம் ஒன்றை அமைத்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.
அரச காணிக்குள் குறித்த ஆலயம் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதனால் அவற்றினை அகற்றுவதற்கான நடவடிக்கையெடுக்கப்படும் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் குறிப்பிட்டுள்ளார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவலடி, திராய்மடு ஆகிய பகுதிகளிலும் இவ்வாறான ஆலயங்கள் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவையும் அகற்றப்படும் என்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *