பிரதான செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மருந்து தொகையுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மருந்து தொகையுடன் சந்தேகநபர் ஒருவர், கல்பிட்டி – கரம்ப பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விற்பனைக்காகவே குறித்த மருந்து தொகையானது இவ்வாறு கொண்டு செல்லப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதன்போது 42300 மருந்து அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதான சந்தேகநபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட வேன் மற்றும் மருந்து தொகையுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

கள்ளு குடிப்பவர்களுக்கு வந்த சோதனை

wpengine

புதுக்குடியிருப்பில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Editor

பேருவளை மர்ஜான் பலீலுக்கு தேசியப்பட்டியல்

wpengine