பிரதான செய்திகள்

சஜித்துடன் இணைவும் சந்திரிக்கா,குமார வெல்கம

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம ஆகியோர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.


இது தொடர்பான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் அண்மையில் முடிவடைந்துள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் இது தொடர்பிலான இறுதி இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, குமார வெல்கம தலைமையில் புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியில் இணைய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

தேசிய கீதத்திற்கு மரியாதை வழங்காமல் பௌத்த மதகுரு செயற்பட்டார்.

wpengine

சர்ச்சைக்குரிய லேடி ரிஜ்வே சிறுநீரக சிகிச்சை விவகாரம் – ஜனாதிபதிக்கு அசாத் சாலி கடிதம்!

Editor

65 ஆயிரம் வீடுகள்: ‘சர்ச்சைகள் பற்றி அரசு ஆராய்கிறது’- ஹிஸ்புல்லா

wpengine