Breaking
Sun. Nov 24th, 2024

கொழும்பை அழ­கு­ப­டுத்தும் நோக்கில் அங்குள்ள குப்­பை­களை ரயில் மூலம் எடுத்து வந்­து­              புத்­த­ளத்­தில் ­கொட்­டு­வ­தற்கு நாம் ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம் என வடமேல் மாகாண சபை  உறுப்­பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரி­வித்தார்.

 

வடமேல் மாகாண சபையின் மாதாந்த அமர்வு அண்மையில் இடம்­பெற்ற போது தனி­நபர்           பிரே­ர­ணை­யொன்றை சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது 2014ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில்               கொழும்­பி­லுள்ள குப்­பை­களை பிரத்­தி­யே­க­மாக ரயில் மூலம் புத்­த­ளத்­திற்கு கொண்­டு­வந்து கொட்­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்டது.

புத்­தளம் வண்ணாத்­த­வில்லுப் பகு­தியில் ஹொல்சிம் தனியார் நிறு­வனம் குத்தகைக்கு பெற்­றுள்ள அறு­வாக்­காடு பகு­தியிலேயே இந்தக் குப்­பைகள் கொட்­டப்­பட­வுள்­ளன.

இதற்­கென புத்­தளம் பாலா­வி­யி­லி­ருந்து பிரத்­தி­யே­க­மாக ரயில் பாதையும் அமைக்க                         திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. கொழும்­பி­லி­ருந்து குப்­பை­களை ஏற்­றி­வரும் ரயில்இ நீர்­கொ­ழும்பு மற்றும் சிலாபம் ஆகிய புகை­யி­ரத நிலை­யங்­க­ளிலும் நிறுத்­தப்­ப­ட­வுள்­ளது எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.10408546_872371036154471_6804719004459310365_n

10 வருட திட்டம் என்று குறிப்­பிட்­டாலும் அந்த திட்­டத்தில் எமக்கு சந்­தேகம் உள்­ளது. மாத்­தி­ர­மின்றி, குறித்த திட்­டத்­தினால் இயற்கை சம­நி­லையில் மாற்றம், தொற்று நோய்கள், சுத்­த­மான குடிநீர் அசுத்­த­மா­ன­தாக நிறம் மாறுதல் என புத்­தளம் மாவட்ட மக்கள் இத்­திட்­டத்­தினால் பல்­வேறு சவால்­களை எதிர்­நோக்க வேண்டி ஏற்­படும்.

இந்த திட்­டத்தை புத்­தளம் மாவட்­டத்தில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று அமைச்சர்                   சம்­பிக்க ரண­வக்க மிகவும் உறு­தி­யா­க­வுள்ளார்.

கொழும்பை அழ­கான நக­ர­மாக்­கு­வ­தை நாம் எதிர்க்­க­வில்லை. ஆனால் எமது புத்­தளம்                    மாவட்­டத்தை குப்­பை­க­ளாக்க வேண்டாம் என்­பதே எமது மக்­களின் கோரிக்­கை­யாகும்.

எனவே, குறித்த திட்­டத்தை புத்­த­ளத்தில் நடை­மு­றைப்­ப­டுத்த மாகாண சபை ஒரு­போதும்                    அனு­ம­தி­ய­ளிக்கக் கூடாது என்­பதை தய­வுடன் கேட்­டுக்­கொள்­வ­துடன், இன, மொழி, பிர­தே­ச­வாதம் என்­ப­வற்றை தூக்­கி­யெ­றிந்து விட்டு எமது மாவட்­டத்தின், சமூ­கத்தின் எதிர்­கா­லத்­திற்­காக எல்­லோரும் ஒரு­மித்து குரல் கொடுப்­பதன் மூலம் இந்த திட்­டத்தை நிறுத்த முடியும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் புத்­தளம் நுரைச்­சோலை                    பகு­தியில் அனல் மின்­நி­லையம் அமைப்­ப­தற்­கு­ரிய ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போது அதனை எல்­லோரும் கடு­மை­யாக எதிர்த்­தார்கள்.

குறித்த பிர­தே­சத்தில் அனல் மின்­சாரம் நிறு­வப்­ப­டு­மானால் அங்கு நிலக்­க­ரி­களை ஏற்றி வரு­கின்ற கப்­ப­லினால் கட­ல­ரிப்பு உண்­டாகும் என அன்று கூறினோம்.

இந்தப் பிர­தேசம் அனல் மின்­சா­ரத்­திற்கு உகந்­தது அல்ல என்றும் தெரி­வித்தோம். எனினும் அன்று ஆயுத முனையில் மிகவும் வலுக்­கட்­டா­ய­மாக அந்த திட்­டத்தை முன்­னெ­டுத்­தார்கள். அந்த திட்­டத்­தினால் இன்று பாதிப்­புக்­களை மக்கள் அனு­ப­விக்­கி­றார்கள்.

எனவே, அது­போ­லவே குப்பைப் பிரச்­சி­னையும் எதிர்­கா­லத்தில் பாரிய சவா­லாக வந்­து­விடக் கூடாது என்­ப­தற்­காக எல்­லோரும் ஒரு­மித்து குரல்­கொ­டுக்க வேண்டும்.

குறித்த திட்டம் தொடர்­பாக மக்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றிந்­து­ கொள்ளும் வகையில் அதற்­கான பெட்டி வண்ணாத்­த­வில்லு பிர­தேச செய­ல­கத்தில் வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் இது­தொ­டர்பில் பொது­மக்­க­ளுக்கு சொல்­லப்­ப­ட­வில்லை. இவ்­வா­றா­ன­தொரு திட்டம் பற்றி மக்­க­ளுக்கு                   தெளிவு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இப்போதுதான் இதுதொடர்பில் பொது மக்கள், சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள் ஆகியோர் விழிப்படைந்துள்ளார்கள் என்றார்.

இதேவேளை, அண்மையில் குருநாகலுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த வடமேல்மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், குறித்த பிரச்சினை தொடர்பில் அவருக்கு எழுத்து மூலம் மகஜரொன்றையும் வழங்கியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *