பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கொரோனா அதிகரிப்பு! கோத்தாவின் வவுனியா விஜயம் ரத்து

எதிர்வரும் 11ம் திகதி வவுனியாவுக்கு வியம் செய்ய இருந்த சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் விஜயம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று பரவல் காரணமாகவே அவரின் இந்த விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாகம் கடந்த முதலாம் திகதி முதல் பல்கலைகழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்அதன் ஆரம்பவிழாவை எதிர்வரும் 11 ஆம் திகதி ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் தலைமையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

எனினும் கொரோனா பரவல் காரணமாக அரச நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால், குறித்த நிகழ்வு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா, புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக சுவரொட்டிகள்

wpengine

113 ஆசனங்களைஎந்தப் பெரும்பான்மை கட்சிகளும் பெற முடியாது.

wpengine

மாவனல்லை சாஹிரா பிரிவு 77இன் வருடாந்த ஒன்று கூடல்

wpengine